Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுகான அறிவுரைகள்

1. 6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி முடிய

2. வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும்.

(FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அடையாள அட்டை)

(வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உட்பட 11 இதர அடையாள ஆவணங்கள்)

3.வாக்குப்பதிவின் போது
வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்*

4. வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் Hand Sanitizer கொடுக்கப்பட்டு பின்பு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும்.

பின்பு ஒரு Gloves ( கை உறை) வழங்கப்படும். (வலது கைக்கு மட்டும்).

உங்களது உடல் வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாக இருந்தாலும், கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தாலும், treatment முடிந்து தனிமையில் இருந்தாலும் நீங்கள் தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில் வாக்குச் சாவடிக்கு சென்று

தகுந்த கவச உடை அணிந்து (கவச உடை வாக்குச்சாவடி மையத்தில் Covid 19 தொற்று அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியே வழங்கப்படும்) ஓட்டு அளிக்கலாம்.

இந்த நேரம் Covid 19 அறிகுறி உள்ளவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

5.வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு நுழைவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வலது கை உறையை முழுமையாக அணிந்துகொண்டு முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப் (அல்லது உங்களது பாகம் எண் வரிசை எண் விபரத்தை) மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்று காண்பிக்க வேண்டும்.

உங்களுடைய அடையாளத்தை உறுதி செய்த பின்பு
முதலாவது தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண்ணை உரத்த குரலில் கூறுவார். இதனை தேர்தல் முகவர்கள் உறுதி செய்த பிறகு

நீங்கள் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று 17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிட்டு, உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும். பிறகு அவர் உங்களுக்கு ஓட்டளிக்க Voters Slip வழங்குவார்.

அதை பெற்றுக்கொண்டு 3வது தேர்தல் அலுவலர் இடம் சென்று அந்த Voters சிலிப்பை கொடுத்த பின்பு அவர் உங்களுக்கு Ballot யூனிட்டில் வாக்களிக்க அனுமதி வழங்குவார்.

நீங்கள் வாக்களிக்கும் இடத்திற்கு சென்று உங்களுடைய *கையுறை அணிந்த வலது கை விரல்களால்* உங்களுக்குரிய வேட்பாளர் பட்டனை அழுத்தி பீப் சத்தம் வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிகப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள் காண்பிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம்.

பிறகு வாக்குசாவடி மையத்தின் வெளியே நீங்கள் அணிந்துள்ள *வலது கையுறையை கழட்டி அதற்குரிய பிளாஸ்டிக் குப்பை பையில் போட்டுவிட்டு* வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத்தவிர மற்றவர்கள் (வாக்காளர்கள், முகவர்கள் உள்ளிட்ட யாரும்) கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

அனைவரும் வாக்களிப்போம் ஜனநாயகத்தை காப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments