சிமெண்ட் விலை உயர்வு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணை முட்டும் சிமெண்ட் விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படும் சூழலில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது உயர்நீதிமன்றம்.
சிமெண்ட் விலை உயர்வுக்கான காரணத்தை ஆராய்ந்து ஜூன் 3-ல் அறிக்கை தர வேண்டும் என சி.பி.ஐ. அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.