இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில், தமிழகம் முதலிடத்தை தொட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் முதலிடத்திலும் கேரளா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 33 ஆயிரத்து 59 பேருக்கும் கேரளாவில் 31 ஆயிரத்து 337 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவாகும் தினசரி கொரோனா தொற்றில் 74 சதவிகிதம் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளையில், நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு விகிதம், 13.31 சதவீதம் ஆக சரிந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக, மூன்று லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.