கோவையில் மக்களுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் அருகிலேயே விற்பனை செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடமாடும் காய்கறி கடைகளை அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன்மூலம் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில், 50 காய்கறி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் சந்தையில் விற்கப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறினார்.