அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன.
நேற்று ஒரே நாளில் 2.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு நாளைய சராசரி 78ஆயிரமாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி வீணாவதும் குறைந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாளொன்றுக்கு 1.64 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பு உள்ளன.
தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளோம். செங்கல்பட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை சரி செய்து செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.