கோவையில் முழு கிராமமே கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி என்ற கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். 19க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.
இதனால் கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிராமத்திற்குள் நுழையும் 4 பகுதிகளும் அடைக்க பட்டுள்ளது.