2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2022 மார்ச் மாதம் நடக்கும் என்று அகாடமி தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 27ல் நடத்த திட்டமிடப்பட்ட விழா, தற்போது மார்ச் 27ல் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விருதுகளுக்காக படங்கள் பரீசிலிக்கப்படும் கடைசி தேதி, வரும் டிசம்பர் 31 ஆகும். தற்போது கொரோனா 2வது அலை நீடித்து வருவதால், ஓடிடியில் வெளியிடப்பட்ட திரைப்படங்களும் தகுதி பெற முடியும்.
ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்றும் அகாடமி தெரிவித்துள்ளது.