டெல்லி
டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 67.
வசந்த் விஹார் இல்லத்தில் கொள்ளை முயற்சியின் போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் துணிகளை துவைத்து தந்து வந்த தொழிலாளி ராஜு(24) தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றார். ராஜுவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.
காங்கிரஸ், பாஜகவில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் மற்றும் திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார்.