வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தி.மு.க. சார்பில் கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயம் முன்பு இன்று காலை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் துணைப் பொது செயலாளர் ஆ.ராசா,கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம். பி., கட்சியின் அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, கழக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ். முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.