சென்னை பெருங்களத்தூர் அடுத்த சதானந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் முதலை வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓடினர்.
விஜயகுமார் என்பவர் வீட்டில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது முதலை இருப்பதாக அலறி அடித்து அங்கிருந்து ஓடி வந்துள்ளனர். அப்போது விஜயகுமார் அங்கு வந்து வீட்டின் வெளியே இருந்த இரண்டு அடி கொண்ட முதலையை பிடித்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இந்த பகுதியில் உள்ள பெரிய ஏரியில் அதிக அளவு முதலைகள் இருப்பதாகவும், அதனை அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டும் எனவும் பொது மக்கள் சார்பில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.