Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகோவையில் கொரோனா விதிமுறைகளை மீறிய மூன்று கல்யாண மண்டபங்களுக்கு அபராதம்

கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறிய மூன்று கல்யாண மண்டபங்களுக்கு அபராதம்

கோவையில் கொரோனா விதிமுறை மீறிய மூன்று கல்யாண மண்டபங்களுக்கு ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் போத்தனூர் ரோட்டில் 3 திருமண மண்டபங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்கள் நடைபெற்று வந்ததால், இந்த திருமண மண்டபங்களில் திருமணம் மற்றும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுத்தனர்.

அப்பொழுது, இந்த நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதை கண்காணித்த மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இதில் இரண்டு கல்யாண மண்டபத்திற்கு தலா 5 ஆயிரமும், 1 கல்யாண மண்டபத்திற்கு 2 ஆயிரமும் மொத்தம் 12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய தனியார் நிறுவனங்கள், அரசு வழங்கியுள்ள கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

மேலும், விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments