Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்புகை பிடித்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும் - இங்கிலாந்து ஆய்வுத்தகவல்

புகை பிடித்தால் கொரோனா தீவிரமாகும், மரணமும் வரும் – இங்கிலாந்து ஆய்வுத்தகவல்

லண்டன்

கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக சீனாவில் தோன்றி பரவினாலும், இன்றைக்கு 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக உலகமெங்கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் (கிளிப்ட்) ஒரு ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:

புகை பிடித்தால் இதய நோய், புற்றுநோய் உள்பட பிற நோய்கள் பாதிப்பதுபோலவே கொரோனாவும் தீவிரமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே புகை பிடிப்பதை கைவிடுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேரை ஆராய்ந்ததி்ல் புகை பிடிப்பதற்கும், கொரோனா தீவிரம் அடைவதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகை பிடிப்போருக்கு கொரோனா பாதிக்கிறபோது, ஆஸ்பத்திரியில் சேர்க்கிற வாய்ப்பு 80 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளது. இவர்கள் இறக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments