Friday, September 29, 2023
Home இந்தியா ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

“ஹெட்டெரோ” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் “ஸ்புட்னிக் லைட்” தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நேற்று(அக்.10) அனுமதி வழங்கி உள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மக்களுக்கும் அவை செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் “ஸ்புட்னிக் – வி” தடுப்பூசிக்கும், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சைடஸ் கேடிலா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்கும் அவசர காலத்தில் பயன்படுத்த டி.சி.ஜி.ஐ எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இதற்கிடையே ரஷ்யாவின் மற்றொரு தடுப்பூசி யான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் ஹெட்டேரோ பையோபார்மா லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஒரு டோசாக மட்டுமே செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்த, டி.சி.ஜி.ஐ., இதுவரை அனுமதி வழங்கவில்லை.

ஹெட்டேரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், ஆறு மாத காலத்திற்குள் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதால், அதை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசிடம் இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷேவ் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று ஹெட்டெரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 40 லட்சம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி டோஸ்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கி உள்ளது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments