இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சமதா கட்சி சார்பாக நேற்று நடைபெற்றது. சென்னையை அடுத்த பெரிய மாத்தூரில் நடைபெற்ற இந்த முகாமில், டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் பயனாளர்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்பெற்றனர்.
இதில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் என்.ஏ.கோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமதா கட்சி, தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், துணைத்தலைவர் சந்திரன், ஊடகபிரிவு மாநிலத் துணைத்தலைவர் சாமுவேல், முன்னாள் கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி மற்றும் தாராபாய் சத்தியமூர்த்தி, டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மைய பொதுமேலாளர் அருள் மற்றும் சமதா கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகளிரணி வடசென்னை மாவட்டத் தலைவர் சோபியா லாரன்ஸ், துணைத்தலைவர் மரியசெல்வி, செயலாளர் நிஷா மேரி, துணைச்செயலாளர் கிறிஸ்டினா பிளாரன்ஸ், பொருளாளர் கேதரின் மேரி மற்றும் மகளிரணி இராயபுரம் பகுதித்தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு வரும் 17ந் தேதி இலவசமாக கண்ணாடி வழங்கப்படுகிறது.