திருவனந்தபுரம்
கேரள மாநில சுகாதாரத்துறை இன்றைய கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் நேற்று புதிதாக மேலும் 9,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10,952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 95,828 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 26,667 பேர் உயிரிழந்த நிலையில் 47,06,856 பேர் குணமடைந்துள்ளனர்.