Sunday, January 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய குடும்பநல சர்வே

இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய குடும்பநல சர்வே

இந்தியாவில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக 5-வது தேசிய குடும்ப நல சர்வே (என்.எப்.ஹெச்.எஸ்) தெரிவித்துள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு சர்வே தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது 1,000 ஆண்களுக்கு, 1,020 பெண்கள் உள்ளனர். கடைசியாக 2015-16ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் என்ற ரீதியில் இருந்தனர்.

இந்தியாவில் மக்கள் தொகை எவ்வாறு இருக்கிறது, எந்த வீதத்தில் இருக்கிறது என்பதை பரவலாக அறிந்து கொள்ள தேசிய குடும்ப நல சர்வே பயன்படுகிறது. நாடுமுழுவதும் 707 மாவட்டங்களில் இருந்து 6.1 லட்சம் வீடுகளில் இருந்துமாதிரிகள் திரட்டப்பட்டன.

ஆனால், இந்த சர்வே பரந்த அளவில் நடத்தப்படாமல் மாவட்ட அளவில் நடத்தப்பட்டும். ஆனால், எதிர்காலசூழலை அறிய காரணியாக இருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளில் அதாவது கடந்த 2015-16ம் ஆண்டில் பாலின விகிதத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பு என்பது ஆயிரத்தில் 919 என்ற விகித்திலிருந்து 929 ஆக அதிகரித்துள்ளது.

பிறக்கும் குழந்தைகளில் நோய் உள்ளிட்ட பிற சிக்கல்களில் இருந்து மீண்டும் உயிர்பிழைத்திருப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கையே அதிகரித்துள்ளது என்று தேசிய குடும்ப நல சர்வே-5 தெரிவிக்கிறது.

குஜராத், மகாராஷ்டிரா, அருணாச்சலப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், டெல்லி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர்ஹாவேலி, லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் அடிப்படையில் மொத்த கருவுறுதல் விகிதம்(டி.எப்.ஆர்) என்பது 2க்கும் குறைவாக இருக்கிறது. இதன்மூலம் இந்தியா மக்கள் தொகையை நிலைப்படுத்தி வருகிறது.அதாவது மொத்த கருவுறுதல் விகிதம் 2.1 க்கு குறைவாக இருந்தாலே பெண்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் இரு குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்பது கணக்காகும்.

அதேநேரம் 2 க்கும் குறைவாகச் சரியும் போது, மக்கள் தொகையும் சரியத் தொடங்கும். ஆனால், இந்தியாவில் பிஹார், மேகாலயா, மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் மட்டும்தான் மொத்த கருவுருதல் 2 க்கும் அதிகமாக இருக்கிறது.

உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. 2040 முதல் 2050ம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடி முதல் 180 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.2031ம் ஆண்டில் இ்ந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் கேரளா மட்டுமே விதிவிலக்காக இருக்கிறது. கேரளாவில் கடந்த 4-வது சர்வேயில் ஆயிரம் ஆண்களுக்கு 1,049 பெண் குழந்தைகள் என இருந்த நிலையில் தற்போது 1,121 பெண்கள் என அதிகரித்துள்ளது. கேரளாவில் மொத்த கருவுருதல் விகிதமும் 1.6 லிருந்து 1.8 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பாலின விகிதத்தைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. அதாவது, 2015-16ல் 1,000 ஆண்களுக்கு 1,047 பெண்கள் இருந்த நிலையில் தற்போது 1,000 ஆண்களுக்கு 951 ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments