Wednesday, March 29, 2023
Home உலகம் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம்...

ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை.

உலக நாடுகளில் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் டெல்டாவை விட பன்மடங்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் நோயில் இருந்து மீண்டவர்களும் கூட ஓமிக்ரான்  வைரசால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்; வாழ்க்கையை இழப்பதை விட, நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது.

தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை  விட, தற்போது ஒத்தி வைத்து விட்டு பிறகு கொண்டாடலாம் என கூறியுள்ளார் டெட்ராஸ் அதானம்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments