இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், “டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்” என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியவாசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்து வருகின்றன. மேலும் கேஸ் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி வருகின்றனர்.
மும்பை போன்ற நகரங்களில் பெட்ரோல் ₹120த் தொட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள து. “டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்” என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் “alcohowl” என்ற பக்கத்தில் ஒரு பெண் “பீர் இப்போது எரிபொருளை விட மலிவானது. பீர் குடி வாகனம் ஓட்டாதே” என்ற பதாகையை ஏந்தியபடி போஸ் கொடுத்திருந்தார். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி தேசிய பீர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.