Tuesday, March 21, 2023
Home உலகம் மோடி அரசை எப்போ கண்டிப்பீங்க? - அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லீம் எம்பி கேள்வி

மோடி அரசை எப்போ கண்டிப்பீங்க? – அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லீம் எம்பி கேள்வி

இந்தியாவில் நடக்கும் மத ரீதியான மோதல்கள், மத ரீதியான அழுத்தங்களை அமெரிக்கா கண்காணிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா எம்பி ஒருவர் இதை பற்றி பேச, இப்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரே இந்த விவகாரத்தை பற்றி பேசி இருக்கிறார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் மத ரீதியான மோதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. முன்பு இஸ்லாமியர்கள் குறி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜேஎன்யூவில் படிக்கும் இந்துக்கள் கூட குறி வைக்கப்பட்டு உள்ளனர். மாமிசம் சாப்பிடுவதே தவறானது என்பது போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ராம நவமி அன்று மசூதிகள் முன்னிலையில் கோஷம் எழுப்புவதும், மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது, கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்படுவது என்று தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலக நாடுகள் பல இந்தியாவில் நடக்கும் இந்த மத ரீதியான வெறுப்பு பிரச்சாரங்களை கவனித்து வரும் நிலையில்தான், இந்தியாவிற்கு எதிராக அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பி இல்ஹான் ஒமார் நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதில், மனித உரிமை ரீதியான மோதல்கள், சிக்கல்கள் இருக்கும் நாடுகள் பற்றி நாம் இங்கே பேச வேண்டும். பத்திரிகையாளர்களின் சுதந்திரம், அவர்களின் செயல்பாடு பற்றி நாம பேச வேண்டும். இந்தியா பற்றி நாம் இங்கே பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் இஸ்லாமியர்களை மோடி அரசு எவ்வளவு அவமதித்தால், மோசமாக நடத்தினால் பிடன் அதற்கு எதிராக குரல் கொடுப்பார். இஸ்லாமியர்கள் இன்னும் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்? மோடிக்கு எதிராக எப்போது பேச போகிறீர்கள்?

என்ன நடந்தால் மோடி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு பேச துணியும். இந்தியாவில் முஸ்லீம் மைனாரிட்டிகளின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியுமா? இதேபோல்தான் நாம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் விஷயத்தில் அமைதியாக இருந்தோம். அதன்பின் நிலைமை அங்கு கைமீறி போனது. பின்னரே நாம் இதில் குரல் கொடுத்தோம். ஆனால் இப்போது இந்தியாவின் விவகாரத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமக்கு வாய்ப்பு இருக்கும் போதே இதை கண்டிக்க வேண்டும்.

எல்லா மதத்திற்காகவும், எல்லா இனத்திற்காகவும், எல்லா மொழிக்காகவும் நாம் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும். உலகம் முழுக்க இருக்கும் மைனாரிட்டி மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று எம்பி இல்ஹான் ஒமார் கடுமையாக தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு உலக அளவில் வைரலான நிலையில்தான் தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா குறித்து முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை கவனித்து வருகிறோம். இந்தியாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சில அரசாங்க அமைப்புகள், போலீஸ், சிறை துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விஷயங்களை கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரிக்கும் மத ரீதியான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்தான் இதை கண்காணிப்பதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments