Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுவேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உலகளவில் 46வது இடம்

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உலகளவில் 46வது இடம்

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை சியோ வேர்ல்ட் (CEOWORLD) இதழ் வெளியிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதில் 3 கல்லூரிகள் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்தவை. 21-வது இடத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், 37-வது இடத்தில் புனேயில் உள்ள இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும் உள்ளன.

46-வது இடத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், 60-வது இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியும் உள்ளன. அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தையும், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

- Advertisment -

Most Popular

Recent Comments