Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்மோகன் பகவத்தின் பேச்சுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் மத கலவரங்களுக்கு விதையாகவும் உள்ளது -...

மோகன் பகவத்தின் பேச்சுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் மத கலவரங்களுக்கு விதையாகவும் உள்ளது – தடா ஜெ.அப்துல் ரஹீம்

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் அகண்ட பாரதம் கோரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை அதே நேரத்தில் மோகன் பகவத் அவர்கள் வரலாற்றைப் படித்து பார்க்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகின்றேன்.

சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் அவர்களின் பேச்சுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் மத கலவரங்களுக்கு விதையாகவும் உள்ளதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையான கண்டனங்கள்.

இன்னும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் சாத்தியமாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் பேசி உள்ளார் இதில் இந்தியாவில் வாழும் பூர்வகுடி முஸ்லிம்களுக்கு ஆட்சேபம் இல்லை.

ஆனால் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு மூல காரணம் முஹமது அலி ஜின்னாவோ இந்திய முஸ்லிம்களோ இல்லை என்று மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சிங் தனது “இந்தியா, பகிர்வு, சுதந்திரம்” புத்தகத்தில் தெளிவாக கூறி உள்ளார.

ஜவஹர்லால் நேரு , படேல்  போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தான்  பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம் என்று கூறி உள்ளார்.

இந்திய பாகிஸ்தான் பிரியக்கூடாது என காந்தி எவ்வளவு உறுதியா இருந்தாரோ அதே அளவு உறுதியோடு முஹமது அலி ஜின்னாவும் இருந்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூர்வகுடிகளாக இருந்த இந்திய முஸ்லிம்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியோ அல்லது அபுல் கலாம் ஆசாத் போன்ற மூத்த முஸ்லிம் தலைவர்களிடம் கருத்து கேட்டே இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு வழி வகுக்கவில்லை.

சுமார் 1906 வாக்கில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைவராக முஹம்மது அலி ஜின்னா நியமிக்கப்பட்டார் அப்போது நாடு முழுவதும் மிகப்பெரிய கலவரங்களை இன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின்  மூதாதையர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் என்றால் அது மிகையாகாது.

சாதாரணமாக ஒரு கட்சிக்கு என்னை தலைவராக நியமனம் செய்ததிற்கே முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வளவு பெரிய படுகொலைகள் நடக்கிறது என்றால் நாடு சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகு முஸ்லிம்களின் நிலை என்ன ஆகும் என முதன்முதலில் முஹம்மது அலி ஜின்னா கேள்வி எழுப்பினாரே ஒழிய பாகிஸ்தான் தனி நாடு கோரவில்லை.

மறைமுகமாக காங்கிரஸ் கட்சியில் ஊடுருவி இருந்த ஆர்எஸ்எஸ் சித்தாந்த மூத்த நிர்வாகிகள் பாகிஸ்தான் பிரிவினைக்கு மூல காரணம் என்பதை இன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களுக்கு தெரியாத வரலாறில்லை

அப்படி இருக்கும் போது அகண்ட பாரதம் என்ற சர்ச்சை பேச்சும், முஸ்லிம்களையும், மதசார்பற்ற அரசியல் கட்சி தலைவர்களையும்  மறைமுக மிரட்டல் பேச்சும், சனாதனம் என்பது தான் இந்து ராஷ்டிரம்! அகிம்சையையும் பேசுவோம் தடியையும் தூக்குவோம் என மிரட்டியும் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை நிறுத்த விரும்புவோர் அகற்றப்படுவார்கள் அல்லது முடிக்கப்படுவார்கள், என்று யாரை  நேரிடையாக எச்சரிக்கை விடுகிறார் என தெரியவில்லை என்றாலும் இது போன்ற பேச்சுகள் இந்தியாவின்  இறையாண்மைக்கு ஆபத்தானது.

இந்தியாவின் முன்னேற்றப் பயணம் என்றால் பாஜக அரசு தற்போது  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை முடிக்கப்படுவார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகின்றாரா?

ஆகவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் அகண்ட பாரதம் கோரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை அதே நேரத்தில் முஸ்லிம்களை மிரட்டும் தொனியில் அடிக்கடி சவடால் விடுவது தேசிய தலைவருக்கான அழகல்ல.

இப்போது ஒரு வாகனம் செல்ல தொடங்கி உள்ளது அதில் பிரேக் இல்லை இடையில் யாரும் வரக்கூடாது என்று யாரை எச்சரித்துள்ளார் என தெரியவில்லை ஆனால் பிரேக் இல்லாத வண்டி நீண்ட தூரம் போகாது எதிலாவது மோதி விபத்தில் சிக்கும் என்று மருத்துவரான மோகன் பகவத் அவர்களுக்கு தெரியாதா?

நல்லது செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தீயது செய்பவர்கள் அழிக்க வேண்டும் என்ற கீதையில் கிருஷ்ணர் கூறியதை மேற்கோள் காட்டி நினைவு படுத்தும் ஆர்எஸ்எஸ் தலைவர் உண்மையில் தீயது ஆர்எஸ்எஸ் பாஜக தான் செய்கின்றனர் என்பதை புரியாதவரா ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள்.

கானல் நீராக காட்சியளிக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளை மறைக்க அடிக்கடி இது போன்ற சவடால் பேச்சுக்களை மோகன் பகவத் பேசுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments