Wednesday, September 11, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் - மரக்கன்று நட்டு துக்கம் அனுசரித்த ஜோ...

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினம் – மரக்கன்று நட்டு துக்கம் அனுசரித்த ஜோ பைடன்

அமெரிக்காவில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதில் அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பைடன் உட்பட அனைவரும் மண்வெட்டியால் மண்ணை வாரி குழியில் போட்டு மங்கோலியா மரக்கன்றை நட்டுவைத்த பின்னர், கைகளை கோர்த்து நின்று பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக ஆர்லிங்டனில் உள்ள வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பைடன் அஞ்சலி செலுத்தினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments