கர்நாடகாவின் சமராஜ்கோட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினம் கொண்டாட்டங்களை நடத்துமாறு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பெங்களூரு மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஈத்கா மைதானத்தில் மசூதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஈத்கா மைதானத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பயன்படுத்த ஒதுக்கப்படுகிறது என்று இந்துத்துவ அமைப்பான இந்து ஜனஜக்ருதி சமிதி ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. இந்துக்களின் உரிமை மறுக்கப்படுவது மோசமானதாகும். இனிவரும் நாட்களில் யோகா தினம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி போன்ற இந்து பண்டிகைகளை இங்கு கொண்டாடுவோம் என்று இந்து ஜனஜக்ருதி சமிதியின் செய்தி தொடர்பாளர் மோகன் கௌடா தெரிவித்துள்ளார்.