நேஷனல் ஹெரால்டு வழக்கில் 4வது முறையாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை இன்று (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், தனக்கு 3 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை ஜூன் 20ம் தேதி மீண்டும் அவரை ஆஜராக கூறியுள்ளது.