Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியா"அக்னிபாத்" திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் - பிஜேபி அலுவலகங்கள், ரயில் நிலையங்களுக்கு தீ வைப்பு

“அக்னிபாத்” திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் – பிஜேபி அலுவலகங்கள், ரயில் நிலையங்களுக்கு தீ வைப்பு

மத்திய அரசின் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் புதிய “அக்னிபாத்” திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பீகாரின் மாதேபுராவில், இந்தத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் பாஜக அலுவலகத்தைத் தாக்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பாஜக அலுவலகத்தை நீண்ட நேரம் தங்கள் வசம் வைத்திருந்தனர். பின்னர் இடிப்புக்கு பின் தீ வைக்கப்பட்டது.

முன்னதாக ஜூன் 16ஆம் தேதி நவாடாவில் உள்ள பாஜக அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இங்கு டயர்களை கொளுத்தி அலுவலகம் தீ வைக்கப்பட்டது. ஆனால், அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தகவல்களின்படி, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் ஜூன் 17 வெள்ளிக்கிழமை மாதேபுரா ரயில் நிலையத்தை கைப்பற்றினர். போராட்டக்காரர்கள் ரயில் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டனர். இதில், டிக்கெட் கவுன்டர்கள், விளம்பர ஹோர்டிங்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கர்பூரி சௌக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பீகாரில் ஜூன் 15ஆம் தேதி முதல் போராட்டங்கள் தொடங்கின. பல இடங்களில் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததன.

அடுத்த நாள், அதாவது ஜூன் 16 அன்று, மாநிலத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் மிகவும் கடுமையானதாக மாறியது. இப்போது ஜூன் 17ம் தேதி கூட நிலைமை சரியாகிவிடுவதாகத் தெரியவில்லை. அக்னிபாத் திட்டத்தை அரசு தாமதிக்காமல் திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “அக்னிபாத்” திட்டத்தை திரும்பப் பெறாத வரை வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

முன்னதாக ஜூன் 14 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் “அக்னிபாத்” திட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பால் போராட்டம் தொடங்கியது.

இத்திட்டம் தொடர்பாக இளைஞர்களுக்கு முக்கியமாக இரண்டு கவலைகள் உள்ளன. இதில் நிரந்தர வேலை இல்லை என்பது முதல் பிரச்சினை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 75 சதவீத இளைஞர்களின் சேவை முடிவுக்கு வரும். இரண்டாவதாக, பழைய ஆள்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்நாள் ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதிகள், இந்த 75 சதவீத இளைஞர்களுக்கு பொருந்தாது.

- Advertisment -

Most Popular

Recent Comments