கழக கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராகவும், தி.மு.கவுக்கு ஆதரவாகவும், தான் தலைமை ஏற்ற கட்சியின் பொதுக்குழுவை தடைசெய்ய போலீசில் புகார் செய்தும், கழகத்திற்கு எதிராக வழக்கு போட்ட பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விதி 35 படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அதேபோல் எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரும் நீக்கப் படுகிறார்கள் என்ற தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.