Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகுடியிருந்த வீட்டை விற்று தையல் போடாத தேசியக் கொடி - நெசவாளியின் தேசபக்தி

குடியிருந்த வீட்டை விற்று தையல் போடாத தேசியக் கொடி – நெசவாளியின் தேசபக்தி

தையல் போடாத தேசியக்கொடியை உருவாக்க ஏழை நெசவுத் தொழிலாளி ஒருவர் வீட்டை விற்று அத்தேசியக்கொடியை தயாரித்துள்ளார். அவரின் இந்தச் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ஒருவர், ஒட்டுப் போடாமல் ஒரே துணியில் மூவர்ணக் கொடியை நெய்யும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றி கண்டுள்ளார். அதற்காக தனது வீட்டையே விற்றுக் கொடியை அவர் தயாரித்துள்ளார்.

மேற்கு கோதாவரியிலுள்ள வேமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி சத்யநாராயணன், மிகுந்த தேசப்பற்று கொண்ட இவர், நீண்ட நாட்களாகத் தான் ஒரு கொடி தயாரிக்க வேண்டும், அக்கொடி தையல் போடாத கொடியாக இருக்க வேண்டும், அந்தக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டு வந்தார்.

கனவை நனவாக்க தனது வீட்டை 6 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை வைத்து நினைத்ததைப் போலவே ஒரு தேசிய கொடியைத் தயாரித்துள்ளார். பின்னர் விசாகப்பட்டினம் வந்திருந்த பிரதமர் மோடியை சந்தித்து அக்கொடியை ஒப்படைத்துள்ளார். ஆனால் அந்தக் கொடி எவ்வளவு தனித்துவமானது என்பதை பிரதமர் மோடியிடம் விளக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, பிரதமர் மோடி அக்கொடியை பார்த்தாரா? இல்லையா என்று கூடத் தனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்பேட்டியின் விவரம் பின்வருமாறு:-

இந்தியாவிற்காக தையல் போடாத ஒரு கொடியைத் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்காக ஒரு கொடியைத் தயாரிக்க முயற்சித்தேன், அதற்கு வெறும் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்று முதலில் எண்ணினேன், ஆரம்பத்தில் தையல் போடாமல் முழுக்க முழுக்க நெய்யப்பட்ட 4 அடி அகலம் 6 அடி நீளத்திற்கு ஒரு கொடியை உருவாக்கினேன். ஆனால் அது செங்கோட்டையில் ஏற்றுவதற்கு உகந்தவை இல்லை எனப் பிறகு இணையதளம் வாயிலாக அறிந்து கொண்டேன், அங்கு ஏற்ற 8 அடி அகலம் 12 அடி நீளம் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். எனவே அதற்கு செலவு அதிகம் ஆகும் என்பதால் எனக்கென்று இருந்த வீட்டை 6.5 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டேன்.

கைக்கு பணம் வந்தவுடன் முயற்சியில் இறங்கினேன், இதற்காக ப்ரத்யேகமாக கைத்தறி நெசவு இயந்திரம் தேவைப்பட்டது, பொதுவாக இயந்திரங்களின் அளவு நான்கடி தான் இருக்கும் ஆனால் நமது கொடிக்கு 10 அடி அகலம் உள்ள கைத்தறி நெசவு இயந்திரத் தேவை என்பதால், முதலில் அந்த இயந்திரத்தை தயாரிக்க வேண்டியிருந்தது, பின்னர் அதை வைத்துக் கொடியை செய்யும் பணியில் இறங்கினேன்,

கொடியை செய்யும் போது பல சிரமங்கள் சவால்கள் இருந்தது, குறிப்பாக அசோக சக்கரத்தின் வட்டம் துள்ளியமாக அமைய வேண்டும், அதற்கு அதிக அளவில் நூல் வீணானது, ஆனாலும் ஒருவழியாக கொடி தயாரிக்கப்பட்டு விட்டது எனப் பெருமைப்படத் தெரிவித்துள்ளார் நாராயணன்.

இப்படி ஒரு கொடியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து உதித்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ” லிட்டில் இந்தியன்ஸ்” என்ற தலைப்பில் குறும்படம் ஒன்றை பார்த்ததாகவும், அதில் வரும் கதாநாயகன் மூன்று வண்ணங்களை இணைத்து கொடியில் அசோக சக்கரம் வைப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது, அப்போது கொடியை தையல் போடாமல் நாம் ஏன் நெய்யக் கூடாது என முடிவு செய்தேன், அசோகச் சக்கரத்தை உருவாக்க வண்ண நூல்களை பிரத்தியேகமாக தயார் செய்தேன் என அவர் கூறியுள்ளார். நெசவாளர் நாராயணன் ஏற்கனவே தனது தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்தவர் ஆவார், ஆனாலும் தான் நெசவு செய்து வரும் வருமானத்தில் மூலம் தனது பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு உதவி வருகிறார்.

ஒரு முறை போக்குவரத்தின் போது ஏற்பட்ட விபத்தில் அவரது 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் நாசமாயின, ஆனால் அப்போது அவருக்கு சில வணிகர்கள் உதவி செய்துள்ளனர். இந்த வறுமைக்கு மத்தியிலும் அவர் தேசியக் கொடியை உருவாக்கி உள்ளார். வழக்கமாக கர்நாடகாவின் ஹூப்ளியில் தயாரிக்கப்படும் கொடிகளே செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக ஏற்றப்படுகின்றன என்பது நாராயணனுக்கு தனக்குத் தெரியும், ஆனால் இந்தக் கொடியை உருவாக்கி இருப்பதின் மூலம் எனது கலைத் திறமையை நான் வெளிப்படுத்தி உள்ளேன், அதிகாரிகள் எனக்கு சரியான நூல்களை வழங்கினார் ஒட்டுப் போடாத கொடியை தன்னால் சிறப்பாக நெய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments