Thursday, December 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அரசு பேருந்து கட்டணத்துடன் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் - போக்குவரத்து துறை...

அரசு பேருந்து கட்டணத்துடன் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளாதாவது:

அரசுப்பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆம்னி பேருந்துகள் அப்படி அல்ல. அது தனியார் ஒப்பந்த வாகனங்களாக இந்தியா முழுமைக்குமான கட்டண விகிதத்துடன் இயங்குவது.

ஏழை எளியவர்கள், நடுத்தர மக்களுக்கான சேவையை நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம். கூடுதல் சேவையை எதிர்பார்ப்பவர்கள் தான் ஆம்னி பேருந்தை நாடுகின்றனர்.

அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி வகை பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. இந்தியா முழுமைக்கும் இதுதான் நிலை.

அதனால்தான் தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர்.

நான் மக்கள் தரப்பிலிருந்து தான் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன்.

தமிழக அரசு சார்பில் 21ஆயிரம் பேருந்துகள் மக்களுக்காக இயங்கி கொண்டிருக்கிறது. ஆனால், தனியார் ஆம்னி பேருந்தில் அதன் கட்டண தெரிந்தும், அதில் பயணிப்பவர்கள் அதிகம் என்று கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments