காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர், “கட்சியின் பெரிய தலைவர்களின் ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கட்சியின் இளைய தலைமுறை தலைவர்கள், தொண்டர்கள் என்னை ஆதரிக்கின்றனர்” என்றார்.