தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அடித்து துன்புறுத்துவது உடலில் மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆன்லைன் நிறுவனத்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோத செயல்களை செய்ய கூறி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.