லண்டன்
இங்கிலாந்து நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், லண்டன் நகர போலீசார் அந்த பகுதிக்கு 5 நிமிடத்தில் உடனடியாக சென்றடைந்தனர்.
ஆம்புலன்சும் சென்றது. அந்த பகுதியை போலீசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும் இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடிப்பதற்கான முயற்சியில் தாக்குதல் நடந்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.