Friday, May 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசஞ்சய் ராவத் காரணமின்றி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் - மும்பை நீதிமன்றம்

சஞ்சய் ராவத் காரணமின்றி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் – மும்பை நீதிமன்றம்

சஞ்சய் ராவத் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாமின் வழங்கிய மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு பணியில் ரூ. 1,000 கோடி மோசடி நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக இந்த வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சஞ்சய் ராவத் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ந் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் கிடைத்ததையடுத்து 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் ராவத், விடுதலையானதை தொடந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் சிறையில் வெளியே வந்த சஞ்சய் ராவத்துக்கு சிவசேனா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சஞ்சய் ராவத் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு ஜாமின் வழங்கிய மும்பை கோர்ட்டு சிறப்பு நீதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீதிபதி தேஷ்பாண்டே, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் (சஞ்சய் ராவத், பிரவீன் ராவத்) சட்டவிரோதமாக காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராகேஷ், சரங் வேதவன்ஸ் மற்றும் இவர்களின் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்களை அமலாக்கத்துறை கைது செய்யாத நிலையில் இந்த 2 பேரும் அதே சமத்துவ நிலைக்கு உரிமை உள்ளவர்கள்’ என கூறி சஞ்சய் ராவத் உள்பட இருவருக்கும் கோர்ட்டு ஜாமின் வழங்கியது.

- Advertisment -

Most Popular

Recent Comments