Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகுஜராத் தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறிவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறிவிட்டது – அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 142 தொகுதிகளில் வெற்றி, மேலும் 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 156 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை எட்டி உள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி, மேலும்1 தொகுதிகளில் முன்னிலை. ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான பாஜக 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும், சுயேட்சைகள் 3 பேர் முன்னிலையில் உள்ளனர். இந்தநிலையில், இன்றைய தேர்தல் மூலமாக ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக வலுப்பெற்றுள்ளதாக டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போதைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தேசியக் கட்சி. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. தேசிய கட்சியாக குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பிரசாரத்தின்போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13% வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது.

இதுவரை 39 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள குஜராத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments