அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு அதிகாரி இன்று முதல் விசாரணையை தொடங்குகிறார்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் முன் ஆஜராகி புகார், வாக்குமூலம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.