Thursday, December 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழக சட்சடசபை - சட்டம், செய்தி, வணிகவரித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

தமிழக சட்சடசபை – சட்டம், செய்தி, வணிகவரித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் தொடங்கியது!*

சட்டம், செய்தி, வணிகவரித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடியது.

கேள்வி நேரம் முடிந்ததும் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

மாலை 5 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள்.

இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவர்.

தொடர்ந்து நாளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறையும், 12ம் தேதி காலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறையும் மாலையில் எரிசக்திதுறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், 13ம் தேதி காலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள் துறையும், மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை மானியக்கோரிக்கையும் நடைபெற உள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments