Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாவெங்கட் பிரபுவின் “கஸ்டடி” திரைப்படம் தோல்விப் படமா?

வெங்கட் பிரபுவின் “கஸ்டடி” திரைப்படம் தோல்விப் படமா?

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் முறையாக வெங்கட் பிரபு தெலுங்கு படம் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்குக் காரணம் வெங்கட்பிரபுவின் கடைசி படமான மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிதான் காரணம்.

அப்படி நம்பி சென்ற ரசிகர்களை மொத்தமாக ஏமாற்றியுள்ளதாம் கஸ்டடி திரைப்படம். படத்தில் ஒரு நிமிடம் கூட ரசிக்கும் படியாக எதுவுமே இல்லையாம். வழக்கமாக வெங்கட் பிரபு யுவன் கூட்டணியில் பாடல்கள் ஹிட்டாகும். இந்த முறை இந்த கூட்டணியோடு இளையராஜா சேர்ந்தும் கூட பாடல்களும் ஹிட்டாகவில்லை என்பது ரசிகர்களின் கருத்து.

- Advertisment -

Most Popular

Recent Comments