Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஒடிசா ரயில் விபத்தை விபத்தைக் காரணம் காட்டி விமானங்களின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மத்திய அரசு, விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரயில் விபத்துக்கான தமிழ்நாடு அரசு உதவி எண் 044 28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம் ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments