அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படுவார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கடந்த 14ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.