“தட்கல்” திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெறும் பணியை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இணைப்பு பெற மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 7குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 10 குதிரைத்திறன் வரை ரூ. 3 லட்சம், 15 குதிரைத்திறனுக்கு ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.