தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழக காவல்துறையில் உள்ள காவலர் முதல் நுண்ணறிவு காவலர்கள் வரை வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் யாரும் கீழே இருக்கும் காவலர்களுக்கு விடுமுறை அளிப்பது கிடையாது, மேலும் சென்னை முழுவதும் உள்ள நுண்ணறிவு பிரிவு காவலர்களுக்கு இந்த விடுமுறை சுத்தமாக தருவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வடசென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கும் முயற்சி செய்தார். மேலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் அப்பன் ராஜ் என்பவர் தன்னுடைய ஆய்வாளர் தனக்கு விடுமுறை அளிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவலர்கள் குடும்பத்தார் கோரிக்கை மேலும் மன உளைச்சலில் உள்ள சில காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. உடனடியாக இதற்கு தீர்வு காண போக்குவரத்து காவலர்கள் சட்டம் ஒழுங்கு காவலர்கள் மற்ற துறையும் சேர்ந்த காவலர்களும் தகவல் தெரிவிக்கின்றனர்
மேலும் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் காவலர்கள் பற்றாக்குறையால் விடுமுறை அளிக்கவில்லை என்று வாய்மொழியாக தெரிவிக்கின்றனர். காவல் நிலையங்களில் பற்றாக்குறையாக உள்ள காவலர்களை நிரப்பி காவலர் மன உளைச்சலை போக்கி விடுமுறை அளிக்க அனைத்து தரப்பினரும் கேட்டு வருகின்றனர்.