பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் முதல் நாளில் 1½ கோடி பக்தர்கள் புனித நீராடினர்
இந்துக்கள் புனிதமாக கருதும் விழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. அதிகமான மக்கள் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாகவும் இது பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பது இந்த கும்பமேளாவுக்கு கூடுதல் சிறப்பு.