Tuesday, July 7, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமுகப்பு விளக்கு செயலிழந்ததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

முகப்பு விளக்கு செயலிழந்ததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹனுமந்த் ராயப்பா (43). அரசு பேருந்தின் ஓட்டுநரான இவர் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு கலபுரகியில் இருந்து 84 கி.மீ தொலைவில் உள்ள‌ சின்சோலிக்கு அரசு பேருந்தை இயக்கினார்.

சின்சோலியை அடைய 6 கிமீ தூரம் இருந்த நிலையில் பேருந்தின் முகப்பு விளக்குகள் திடீரென செயலிழந்தன. இதனால் நடத்துநர் மஞ்சுநாத் பேருந்தில் நின்றவாறு செல்போன் டார்ச் லைட்டை ஒளிரச் செய்ய, அதன் வெளிச்சத்தில் ஓட்டுநர் ஹனுமந்த் ராயப்பா இடைவிடாமல் பேருந்தை இயக்கினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments