Wednesday, August 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது - பீகாரில் தகர்ந்த பா.ஜ.க கோட்டை

மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது – பீகாரில் தகர்ந்த பா.ஜ.க கோட்டை

பீகார், ம.பி., குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதி காலியானது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது.

மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30ம் தேதி வாக்குப்பதிவும், இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இந்நிலையில் பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும், குஜராத்தில் பாஜகவும், ம.பி.யில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

பீகாரில் பாஜக வேட்பாளர் நீரஜ்குமாரை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

- Advertisment -

Most Popular

Recent Comments