சென்னை
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரி விழாவையையொட்டிகோவில்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிவாராத்திரியையொட்டி மேற்கண்ட கோவில்களில் பக்தர்கள் விடிய, விடிய பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும் வினியோகம் செய்யப்பட்டன.
இதேபோல் திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர், சேலம், நெல்லை பாளையங்கோட்டை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்,பாபநாசம், நாகையில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறைப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய விடிய கொண்டாடங்களோடு, விரதம் இருந்து சிவனை தரிசனம் செய்தனர்.