Thursday, January 9, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

புதுடெல்லி

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், வயது 74, உடல்நலக் குறைவால், இன்று இரவு காலமானார்.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பஸ்வான் உயிரிழந்ததாக, அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், தெரிவித்தார்.

பீஹாரைச் சேர்ந்த பஸ்வான், சக்யுக்தா சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தார். 1969ல் பீஹார் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், லோக் தள் கட்சியில் சேர்ந்தார்.கடந்த, 1977ல், முதல் முறையாக, ஜனதா கட்சி சார்பில், லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், ஏழு முறை தொடர்ந்து லோக்சபா, எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த, 2000ல் லோக் ஜன்சக்தி கட்சியைத் துவக்கினார். பெரும்பாலும், ஹாஜிபூர் தொகுதி எம்.பியாகவே இருந்த அவர், இறுதியில், ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தார். மத்தியில் அமைந்த அனைத்து கூட்டணி அரசுகளிலும் இடம் பெற்றிருந்த அவர், ஐந்து பிரதமர்களின் கீழ், அமைச்சராக பணியாற்றியுள்ளார். தலித் சமூகத்தினரிடையே, மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவராகத் திகழ்ந்தார். ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பஸ்வானின் மறைவால் தேசத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை யாராலும் நிரப்ப முடியாது என மோடி இரங்கல்

ராம்விலாஸ் பஸ்வான் தனது துறை சார்பில் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை செய்துள்ளார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தார் என வைகோ புகழாரம் சூட்டி உள்ளார்.

அமைச்சரின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது கட்சிக்கும் பீகார் மக்களுக்கும் பேரிழப்பாகும் என அமைச்சர் ஜெயகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments