கொரோனா தொற்று காரணமாக திரையில் எந்த படங்களும் ஓடவில்லை. இதனால் பலர் ஏற்கெனவே தயாராகி இருந்த தங்களது படங்களை OTT தளத்தில் வெளியிட்டனர்.
அதில் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகி இருந்தது.
அவரது படம் OTTயில் வெளியானதால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இனி அவர் படங்களை எங்களது திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று அப்போதே தெரிவித்திருந்தனர்.
அண்மையில் திரையரங்க சங்க உரிமையாளர்கள் ஒரு பேட்டியில், சூர்யாவின் படங்கள் இனி OTT தளத்திலேயே வெளியாகட்டும் என கூறியுள்ளனர்.