Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை - ப.சிதம்பரம்

பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை – ப.சிதம்பரம்

பெகாஸஸ் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழுவோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெகாஸஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்ட தொடர் முடங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், வேவு பார்க்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “சட்ட விரோதமாக வேவு பார்க்கப்பட்டதால் மொத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் மாறியது என ஒருவர் சொல்லலமா என எனக்கு தெரியவில்லை. ஆனால், பாஜக வெற்றி பெறுவதற்கு அது உதவி புரிந்துள்ளது.

இதில், தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை காட்டிலும் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை சிறப்பாக இருக்கும். ஏனெனில், இது அதிகாரம் படைத்தது” என்றார்.

பெகாஸஸ் விவகாரத்தில் தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையே போதுமானது. நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவைப்படாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பியதற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு முழுவதும் பாஜக உறுப்பினர்களே உள்ளதால் இதில் விசாரணை நடத்த அவர்கள் அனுமதிப்பார்களா என எனக்கு சந்தேகமாக உள்ளது.

நாடாளுமன்ற குழுவின் விதிகள் கண்டிப்பாக இருக்கும். எடுத்துக்காட்டாக, அவர்களால் ஆதாரத்தை வெளிப்படையாக பொதுவெளி வெளியிடமுடியாது. ஆனால், பொதுவெளியில் வெளியிடும் அதிகாரமும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரமும் கூட்டு குழுவுக்கு உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments