இந்தியாவின் மொத்த பொருளாதார மதிப்பில் ரூ.10,000 கோடி யூடியூபர்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
2020-ல் இந்திய பொருளாதாரத்தில் ரூ.6,800 கோடியாக இருந்த யூடியூபர்கள் பங்கு 2021-ல் ரூ.10,000 கோடியாக உயர்ந்துள்ளது. 7.5 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு தந்ததற்கு இணையான வேலை வாய்ப்பை யூடியூபர்கள் உருவாக்கியுள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் விளக்கமளித்துள்ளது.