ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை எலான் மஸ்க் நியமித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இனி வணிக நடவடிக்கைகள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.