பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர்.
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். மொத்தம் 94 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் கொழும்பு பிரமேதசா மைதானத்தில் (2012, 2017, 2017 மற்றும் 2023) தொடர்ச்சியாக 4 ஒருநாள் போட்டிகளில் சதத்தை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.